News March 20, 2024
மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் அமைந்திருக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு புதுச்சேரி மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் எழுது பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாற்றில், தனது பெயரைப் பொறித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சிறப்பான வெற்றி, நம் நாட்டின் அனைத்து மகளிருக்கும் ஒரு புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாகும்.
News November 3, 2025
புதுச்சேரி: 12th போதும் ரூ.63,200 சம்பளத்தில் வேலை!

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் காலியாக உள்ள 14 கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், மூத்த கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.9,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2025 தேதிக்குள் <
News November 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி.ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தருவது, பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பது மற்றும் பயன்பாட்டிற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.” என எச்சரித்தார்.


