News September 12, 2025

மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நீட்டிப்பு

image

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற சரஸ்வதி பூஜை தினம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இங்கு மூன்றாண்டு படிப்புகளாக நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கலை கற்றுத் தரப்படுகிறது. கற்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ், சைக்கிள் வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் சிவகலை தெரிவித்தார்.

Similar News

News September 12, 2025

நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476,9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News September 12, 2025

நெல்லை: அமரர் ஊர்தி உரிமையாளர் விபத்தில் பலி

image

மூலைக்கரைப்பட்டி அருகே காரியாண்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. அமரர் உறுதி உரிமையாளரான இவர் கடந்த 4ம் தேதி மாலை பைக்கில் மூலைக் கரைப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கீழக்கோடங்குளம் அருகே வந்த போது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட சின்னத்துரை நேற்று உயிரிழந்தார்.

News September 12, 2025

நெல்லை பயணிகளுக்கு புதிய வசதி

image

நெல்லையிலிருந்து அவசரப் பணிக்கு சென்னை செல்பவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் சென்று விமானத்தில் பறக்கின்றனர். நெல்லையில் இருந்து விமான நிலையம் 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதை இணைக்கும் நான்கு வழிச்சாலையில் தடையின்றி செல்வதற்கு வசதியாக பாளை அருகே வசவப்பபுரம், முறப்பநாடு, மங்களகிரி உள்ளிட்ட 5 பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!