News February 27, 2025

மாணவர் உடலை வாங்க மறுப்பு ஆட்சியர் பேச்சு வார்த்தை

image

ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.தகவல் அறிந்து வந்த அமைச்சர் மதிவேந்தன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா  மாணவரின் பெற்றோர் உறவினருக்கு ஆறுதல் கூறி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் உடலை வாங்க மறுப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News March 4, 2026

நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (04-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.128- ஆகவும், பண்ணை கோழி விலை ரூ.62- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News March 4, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!