News January 22, 2025

மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

image

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.

Similar News

News November 6, 2025

புதுச்சேரி: ஊழியருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

image

புதுச்சேரி, போலி சான்றிதழ் கொடுத்த குமாரவேல் மீது, பாப்ஸ்கோ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நடராஜன் அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி கோர்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், பதவி உயர்விற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்த குமாரவேலுக்கு 6 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News November 6, 2025

புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

புதுவை நோணாங்குப்பம் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.6) இரவு 10 மணி முதல் நாளை (நவ.7) காலை 6 வரை, புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் அரும்பார்த்தபுரம் பைபாஸ் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள் தவளகுப்பத்தில் திரும்பி பைபாஸ் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

News November 6, 2025

புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை!

image

புதுச்சேரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது, சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!