News August 14, 2024
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட்.14) திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
Similar News
News December 21, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் NMMS தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதையும் தேர்வுகள் நடைபெற்று வருவதையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருகின்ற டிசம்பர் 23 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
திருவாரூர்: கிரைண்டர் வாங்க காசு வேணுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE
News December 21, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் அப் லிங்க் மூலம் அனுப்பப்படும் போலிகள் பற்றி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 30000 வழங்கும் திட்டம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பப்படுவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் பண பறிப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அது அரசின் திட்டமும் இல்லை என அறிவிக்கவுள்ளது. ஷேர் பண்ணுங்க


