News November 10, 2025
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினிவழங்கப்பட்டது . இதை தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் இன்று (நவ.10) மடிக்கணினிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய மாணவன்

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டி அள்ளி இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அருள் கணேஷ், தொழிலாளி. இவருடைய மகன் கவுதம்ராவ் (வயது 15). தோக்கம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கவுதம்ராவ் திடீரென பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
News March 3, 2026
தருமபுரி இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02), இரவு முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 2, 2026
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


