News August 7, 2024
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்

புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று புதுச்சேரி, முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும், விழாவில் சபாநாயகர், உள்துறை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 3, 2025
புதுச்சேரி: தேசிய அளவில் விருது பெற்ற காவல் நிலையம்

இந்தியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து விருது, சான்று வழங்கி வருகிறது. அதன்படி தேசிய அளவில், சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலில், பாகூர் போலீஸ் ஸ்டேஷன் 8ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
News December 3, 2025
புதுச்சேரி: விடுமுறை மாற்றம் – அரசு அறிவிப்பு

புதுச்சேரி அரசு செயலர் ஹிரன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அடில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி புதுவைக்கு நாளை அரசு விடுமுறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை,
டிச.4ஆம் தேதி என்பதிற்கு பதிலாக, இன்று டிச.3ம் தேதிக்கு என திருத்தம் செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
BREAKING: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், நாளை (டிச.3) புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


