News December 11, 2025
மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேசிய திறனாய்வு தேர்வுக்காக மாணவர்களை சிறப்பாக தயார்படுத்திய ஆசிரியர்கள், தேர்வான மாணவர்கள் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு அறிவிப்பு!

தமிழ் ஆட்சி மொழி சட்டம் 1956 இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வார கால ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
News December 14, 2025
மயிலாடுதுறை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

மயிலாடுதுறை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


