News September 28, 2025
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய டி.எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியுடவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் (செப் 27) மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோக போட்டி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Similar News
News February 5, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், காவலூர், அம்பலூர், வாணியம்பாடி, உமராபாத், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலையங்கள் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் 13 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News February 5, 2026
வாணியம்பாடி: அரசு மருத்துவர் தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக கடந்த பல மாதங்களாக பணியாற்றி வந்த, சிவசுப்பிரமணியம் என்பவர் நேற்று (04.02.2026) வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 5, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.4) இரவு முதல் இன்று (பிப்.5 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


