News March 27, 2025
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய கலெக்டர்

திருப்பூர், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் முதல்வர் (புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) சு.மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
Similar News
News March 30, 2025
இடுவாய் சித்தி விநாயகர் கோயில்!

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு ஊர் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து வந்து, பக்தர்கள் விநாயகரை தரிசிக்கின்றனர்.
News March 30, 2025
அவிநாசி புதிய நகராட்சி

அவிநாசி புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
News March 30, 2025
திருப்பூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா!

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2ஆவது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும் என்றார். இந்த நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாதவர்கள் மார்ச்.31க்குள் செலுத்தவும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே இதில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)