News April 3, 2025
மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்

திருவாரூர் ஹாக்கி யூனிட், ASM ஹாக்கி கிளப் மற்றும் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளி இணைந்து நடத்தும்
மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்
27.04.2025 முதல் 18.05.2025 வரை திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் 7 முதல்18 வயது வரை உள்ள
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது
பயிற்சி நிறைவில் சான்றிதழ் உண்டு தொடர்பிற்கு:8940266129
Similar News
News July 5, 2025
23 வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம்

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தற்கா பகுதியில் தகராறில் ஈடுபட்ட வசந்த் என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். மேலும் வசந்த் மீது கொலை முயற்சி அடிதடி என மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வசந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
News July 5, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் காவல்துறை அறிவித்துள்ளது.
News July 4, 2025
மாங்கல்ய வரம் அருளும் நெல்லிவனநாதர்

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவில் அமைந்துள்ள நெல்லிவனநாதர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் நெல்லிவனநாதர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!