News November 18, 2024
மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின

மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான, அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் இருவரது உடல்களும் நேற்று கரை ஒதுங்கின. உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர் கண்ணீர் விட்டு கதறினர். 16ஆம் தேதி நண்பர்களுடன் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி, கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின.
Similar News
News April 7, 2026
சென்னை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னை மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே கிளிக் செய்து ஏப்.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 7, 2026
சென்னையில் மீண்டும் மீண்டும் விஜய்யின் பரப்புரை ரத்து!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் சைதாப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு போலீசார் அனுமதி கொடுத்தாலும் நேர கட்டுப்பாட்டால் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
சென்னை: தண்ணீர் குடித்த சிறுமி துடிதுடித்து பலி

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சோனியா. இவருக்கு திருமணமாகி லாவண்யா(6), சம்யுக்தா(3) என, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் லாவண்யா தண்ணீர் குடித்தபோது, திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். பெற்றோர், சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


