News August 24, 2024
மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News December 13, 2025
நாமக்கலில் பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 13, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (13-12-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.114-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை, இதுவரை வரலாறு காணாத உச்ச விலையான ரூ. 6.15-க்கு விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை உயர்வடைந்துள்ளது.
News December 13, 2025
வெண்ணந்தூரில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

நாமக்கல் மாவட்டம்,வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆயில் மில் சூப்பர்வைசர் ஞானசேகரன் (45), குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ராசாபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரனின் மரணத்திற்கான காரணம் குறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.


