News December 16, 2025
மாணவன் பலி.. CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

திருவள்ளூரில் அரசுப் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு <<18583805>>மாணவன் உயிரிழந்த<<>> துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News December 20, 2025
டெல்லி: காற்றுமாசை தடுக்க அரசுப் பள்ளிகளில் Air Purifiers

டெல்லியின் காற்றுமாசு நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது அங்கு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளின் நலம் காக்க டெல்லி அரசு ‘பிரீத் ஸ்மார்ட்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 10,000 அரசுப் பள்ளி வகுப்பறைகளில் காற்றை சுத்தப்படுத்தும் Air Purifiers நிறுவப்படும். விரைவில் இது 38,000 வகுப்பறைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
BREAKING: விஜய் கட்சியில் அதிரடி நீக்கம்

தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் கட்சி பதவியை பறித்து புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெகவில் பதவி வழங்குவதாகக் கூறி பெண் நிர்வாகியிடம் செந்தில்நாதன் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று SM-ல் வைரலாகி வருவது கவனிக்கத்தக்கது.
News December 20, 2025
2025-ல் அசத்திய இந்திய வீரர்கள் PHOTOS

2025-ம் ஆண்டில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது முதல் RO-KO ஜோடி பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது வரை பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்களிலும் டாப்பில் உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


