News December 17, 2025
மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News April 9, 2026
நாளை முதல் FASTag கட்டாயம்

நாளை முதல் சுங்கச்சாவடிகளில் FASTag கட்டாயமாக்கப்படுகிறது. ரொக்கமாக பணம் செலுத்தும் முறை முழுவதுமாக ரத்து செய்யப்படும் நிலையில், FASTag, UPI மூலம் மட்டுமே சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். ஆனால், UPI மூலம் செலுத்தினால் கட்டணத்தோடு கூடுதலாக 25% செலுத்த வேண்டும். பணம் செலுத்தவில்லை என்றால் வாகன ஓட்டிக்கு e-notice அனுப்பப்படும். பின்னர் 72 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
News April 9, 2026
வீட்டு சிலிண்டர்.. அரசு புதிய அறிவிப்பு

கேஸ் தட்டுப்பாடு இருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் 100% உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், LPG விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்க பகுதியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதா?
News April 9, 2026
முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

உங்களுக்கு அதிகம் முடி கொட்டுகிறதா? உங்கள் கவலையை போக்க முட்டை, தயிர் இருந்தால் போதும். இவற்றில் உள்ள பயோட்டினும் புரோட்டீனும் முடி உதிர்வை தடுக்க உதவும். இதற்கு முட்டையின் வெள்ளைக் கரு, 1 ஸ்பூன் தயிர் இரண்டையும் கலந்து, குளிப்பதற்கு 1 மணிநேரம் முன்பே தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன்பின் சீயக்காய் தேய்த்து குளியுங்கள். வாரம் இருமுறை இதை செய்துவர முடி உதிர்வு நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.


