News September 6, 2024
மாணவனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்திய ரஜினி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சையது சல்மான் என்ற மாணவன், தனது மேற்படிப்பிற்காக கல்லூரி கட்டணம் செலுத்த இயலாமல் பணமின்றி தவித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், அந்த மாணவனின் விவரங்களை வாங்கி கொண்டார். பின்னர், மாணவனின் கல்வி கட்டணத்தை நேரடியாக அந்த கல்லூரியின் வங்கி கணக்கிற்கே அனுப்பி நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News September 1, 2025
உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 1, 2025
விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <
News September 1, 2025
விழுப்புரத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்