News August 19, 2024
மாட்டு இறைச்சி கடைகளுக்கு ரூ.1000 அபராதம்

பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள 5 மாட்டு இறைச்சி கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் இல்லாமலும் மாட்டு இறைச்சி கழிவுகள் 1900 கிலோ திறந்த நிலையில் தொற்று நோய் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர், தரமற்ற மாட்டிறைச்சி விற்ற கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News August 14, 2025
தஞ்சை வந்தடைந்த 2736 டன் உரங்கள்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒடிசாவில் இருந்து சரக்கு ரயிலின் 29 வேகன்களில் 1,800 டன் காம்ளக்ஸ், டி.ஏ.பி. உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து 936 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
News August 14, 2025
தஞ்சாவூர்: VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News August 14, 2025
தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <