News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.
Similar News
News February 2, 2026
அதிரடி திருப்பம்: கூட்டணி அமைத்த பாஜக- காங்கிரஸ்!

பரம எதிரிகளான காங்கிரஸ் & பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் மாநகராட்சியின் மேயர் & துணை மேயர் தேர்தலில், இஸ்லாம் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. 84 உறுப்பினர்களை கொண்ட மாலேகான் முனிசிபல் கார்ப்பரேஷனில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி மேலிட உத்தரவின்றி கூட்டணி அமைப்பது குறித்து CM தேவேந்திர பட்னவிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
SPORTS 360°: WC-ல் ஆஸி.,க்கு பெரும் பின்னடைவு

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 கைப்பற்றியது. *காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையின் தொடக்க போட்டிகளில் ஹேசல்வுட் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. *CCL கிரிக்கெட் தொடரில் கர்நாடகா புல்டவுசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. * நிச்சயம் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வேன் என ஜோகோவிச் உறுதி அளித்துள்ளார்.
News February 2, 2026
₹25,000 வரை உதவித்தொகை வழங்கும் திட்டம்

பழங்குடியினர் தொடர்பான ஆய்வு & ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது தொல்குடியினர் புத்தாய்வு திட்டம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <<-1>>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.


