News January 16, 2026
மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News January 31, 2026
இரட்டை இலக்க தொகுதிகளை கேட்போம்: திருமாவளவன்

எல்லா சூழல்களையும் கருத்தில் கொண்டு தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்க தொகுதிகள் பெற வேண்டும் என்பது தான் விசிகவின் கோரிக்கையாக உள்ளது என்றும், 2011-ல் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால் 2021-ல் 6-ஆக குறைந்தது. இந்தமுறை இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம். ஆனால் அதை நிபந்தனையாக முன்வைக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 31, 2026
ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


