News March 19, 2024
மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் இன்று (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜரான ஷாஜகான் என்பவர் நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். படுகாயமடைந்த ஷாஜகான் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 3, 2025
குழந்தை வரம் தரும் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று கோட்டை மாரியம்மன் கோயில். 8 கைகள் கொண்டு காட்சி தரும் இந்த மாரியம்மனை மனதார வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு தாளி பாக்கியம், ஆனவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேகம்பூரில் உள்ளது இந்த கோட்டை மாரியம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 3, 2025
வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தென் மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
News April 3, 2025
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.