News September 12, 2025
மாஜி எம்பி வீரய்யா நினைவு அஞ்சலி!

புதுகை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி வீரைய்யா நினைவு நாள் இன்று (செப்12) அனுசரிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா, மாநகர் கவுன்சிலர் காதர் கனி மாநகர் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான ஒன்றிய செயலாளர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
Similar News
News September 12, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

புதுகை மக்களே வங்கியில் வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை தவற விடாதீங்க. SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <
News September 12, 2025
மாஜி திமுக எம்பி வீரையா நினைவு அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி க வீரையா நினைவு தினம் இன்று செப்டம்பர் 12 அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மாவட்ட திமுக பொருளாளர் லியாகத் அலி அவைத்தலைவர் வீரமணி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
News September 12, 2025
திமுக செயலாளர் செல்ல பாண்டியன் அஞ்சலி!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தந்தை வேதமூர்த்தி (80) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் இன்று அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.