News July 4, 2025

மாங்கல்ய வரம் அருளும் வேதபுரீஸ்வரர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் வேதபுரீஸ்வரர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 11, 2025

நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வங்கக் கடலில் உருவாகி நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் காற்றின் வேகம் 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களும் விரைந்து கரைத்திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

News December 11, 2025

நாகை: சரக்கு வாகனம் மோதி பரிதாப பலி

image

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்தவர் அலிஷேக் மன்சூர் (60). இவர் நேற்று தனது டூவீலரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திட்டச்சேரி அடுத்த குருவாடி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் அலிஷேக் மன்சூரின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 11, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணத்திற்காக தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய நபர்கள் 2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை அறிய http://awards.tn.gov.in என்ற இணையதளத்தை அணுக அவர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!