News November 6, 2025
மழை வெளுத்து வாங்கும்

கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்கு செல்பவர்கள் குடைகள், ரெயின் கோட்டை எடுத்து செல்ல மறக்காதீங்க மக்களே!
Similar News
News February 9, 2026
தவெக கூட்டணி: நேரில் சந்திக்கிறார் செங்கோட்டையன்

அன்புமணி இருக்கக்கூடிய அதிமுகவுடனும், திருமா இருக்கக்கூடிய திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத சூழலில் ராமதாஸ் சிக்கி தவித்து வருகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ராமதாஸை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறாராம். இன்னும் ஓரிரு நாள்களில் ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் KAS, 10 தொகுதிகள் வரை ஒதுக்க ஓகே சொல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 9, 2026
திமுக ஆட்சியில் கோவை புறக்கணிப்பு: எஸ்.பி.வேலுமணி

கோவையில் தெருமுனை பிரசாரத்தை துவக்கிவைத்த பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் இல்லை, கொண்டு வர நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், விளம்பரம் மட்டும் திமுக செய்வதாக விமர்சித்தார்.
News February 9, 2026
கம்யூ., சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும்:

நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும். எனவே, அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


