News October 11, 2024

மழை காலத்தில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

image

மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால் ஆற்காடு வட்டாட்சியர்- 04172-235568, 97903 38055, வாலாஜா வட்டாட்சியர்- 04172-299808, 74188 26834, சோளிங்கர் வட்டாட்சியர்- 04172-290800, 79040 46386, நெமிலி வட்டாட்சியர்- 04177-247260, 90033 90636, கலவை வட்டாட்சியர்- 04173-290031, 80726 01378 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Similar News

News November 20, 2024

கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே வாகனங்களுக்கு அதிக கட்டணம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாதம் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரர் அதிக கட்டண வசூல் செய்வதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். கோயிலுக்கு வரும் கார்களுக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.எப்போதும் 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மட்டும் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.