News November 22, 2024

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ நிவாரணம்

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டோர் பாம்பன், மண்டபம், சக்கரக்கோட்டை நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதில் பாம்பனில் தங்கியுள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ நேற்று (நவ.21) இரவு சந்தித்து ஆறுதல் கூறி, 1 மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கினார். நவாஸ் கனி எம்பி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News August 14, 2025

ராமநாதபுரம்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை 04567-
230466 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

News August 14, 2025

ராமநாதபுரம்: கணவரால் பிரச்சனையா.! உடனே கூப்பிடுங்க.!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04567-230466-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச்சங்கம், கடலாடி வட்டாரம்
அ.புனவாசல் செயலக கட்டடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பரமக்குடியில் நடைபெறும் முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்து பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!