News April 7, 2025

மழையால் சேதமான மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி

image

சீதபற்பநல்லூர் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாதேஷ் வயது 6. இவர் அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் விழுந்தன. இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்ற மாதேஷ் மின் வயரில் மிதித்து விட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

நெல்லையில் தேசிய புத்தக கண்காட்சி

image

நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் 40வது தேசிய புத்தக கண்காட்சி நாளை (நவ.14) மாலை‌ 5 மணிக்கு எஸ்.என் ஹை ரோடு நயினார் காம்ப்ளக்ஸ் அருகில் வைத்து நடைபெற உள்ளது. நிவேதிதா கல்விக் குழுமம் முத்துக்குமாரசாமி புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நவ.14 முதல் 30 வரை நடைபெறுகிறது.

News November 14, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News November 13, 2025

நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

image

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.

error: Content is protected !!