News October 7, 2025
மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்காக புதிய பணிகள் எதுவும் நடைபெற கூடாது. மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.
Similar News
News October 8, 2025
சென்னை: இரவு ரோந்து போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (07.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News October 8, 2025
முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (அக்.7), 2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்து கோப்பையை அறிமுகப்படுத்தினார். அருகில், விளையாட்டு துறை அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
News October 7, 2025
வழக்கறிஞர் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

திருமாவளவன் கார் பைக் மீது மோதியது தொடர்பான வீடியோவை அண்ணாமலை தனது X வலைதள பக்கத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், எம்.பி திருமாவளவன் கார் பைக் மீது மோதியதை தட்டிக் கெட்ட வழக்கறிஞரை அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தலைமை நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்காக போராட சென்ற எம்.பி திருமாவளவனின் ஆதரவாளர்கள் மற்றொரு வழக்கறிஞரை தாக்கியது மோசமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.