News March 9, 2026
மழைநீர் ஓடையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

ஏற்றக்கோடு புத்தன் விளையை சேர்ந்தவர் சிங் (38). 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கேபிள் வேலை செய்த போது விபத்து ஏற்பட்டு இடது புற கணுக்காலின் கீழ் பகுதி அகற்றப்படது. இந்நிலையில் வீயன்னூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு வந்த சிங் அப்பகுதியில் உள்ள மழைநீர் ஓடையில் விழுந்துள்ளார். இதில் ஏற்கனவே காயம் ஏற்பட்ட காலில் மீண்டும் காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News March 9, 2026
குமரி: காங்கிரஸ் கட்சியினர் தொடர் நடை பயணம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக 8வது நாளாக கண்டன நடைபயணம் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து கோழிப்போர்விளை முதல் முளகுமூடு வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி லாரன்ஸ் தலைமை வகித்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 9, 2026
நாகர்கோவிலில் 16 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் கைது

நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது மாணவியும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
News March 9, 2026
குமரி கடலில் 1,448 ஆமை குஞ்சுகள்

குமரி மாவட்டத்தில் லெமன் கடற்கரை ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் ஆகிய இடங்களில் முட்டையிடப்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு லெமூர் கடற்கரை மற்றும் துவாரக பதி கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன. இதில், 1448 குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக நேற்று கடலில் விட்டனர்.


