News October 24, 2024

மழைநீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள்

image

காஞ்சிபுரம் முழுதும் 15,000 ஏக்கருக்கு மேல், பின் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நீரில் மூழ்கிய நெற்கதிர் வயலில் இருந்து மழை நீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீரில் மூழ்காத நெற்கதிர்களை, பெல்ட் நெல் அறுவடை இயந்திரத்தில் அறுவடை செய்து வருகின்றனர். இதில், மகசூல் குறையும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை மேற்கு வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). இவர், ஆதம்பாக்கத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு வந்த +2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அவருடன் பழகுவதை மாணவி நிறுத்தியுள்ளார். இதற்கிடையில், ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆகாஷை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு வழங்க இவரது நிலத்தை அளவீடு செய்து தர சர்வெயர் சுந்தர வடிவேலு(46) என்பவரை அணுகினார். அதற்கு சர்வேயர் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரசாயன பொடி தடவிய நோட்டுகளை வைத்து கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

News February 11, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!