News November 22, 2025

மழைக்கு மரியாதை கொடுங்க தம்பி: சீமான்

image

தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, கடலம்மா மாநாட்டை நெல்லையில் சீமான் நடத்தினார். இதில் அவர் பேசிக்கொண்டிருந்த போது, மழை பெய்ய தொடங்கியதால், தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க சேர்களை தூக்கிப்பிடித்தனர். இதை கவனித்த சீமான், மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா என கூறி, சேரினை இறக்க அறிவுறுத்தினார். கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை என்றும் கூறினார்.

Similar News

News February 11, 2026

தாய்மையை போற்றும் நடிகை பூர்ணா

image

பரத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், 2022ல் துபாய் தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஏற்கெனவே 3 வயதில் மகன் உள்ள நிலையில், தனது 2-வது குழந்தைக்கான வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அழகு மிளிரும் அந்த புகைப்படங்கள் SM-ல் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

News February 11, 2026

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: பாஜக

image

ஆட்சியில் ஏன் பங்கு தரவில்லை என்பது குறித்து திமுக, அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என பாஜக தரப்பில் ஏற்கெனவே சொல்லிவிட்டதாகவும், யாரையும் கஷ்டப்படுத்தி NDA கூட்டணியில் இணைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் உள்ள காங்., ஆட்சியில் பங்கு கேட்கும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

News February 11, 2026

ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை!

image

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹160 மட்டுமே உயர்ந்த நிலையில், மாலையில் தாறுமாறாக மேலும் ₹1,520 அதிகரித்திருப்பது நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதன்மூலம், 22 கேரட் தங்கம் இன்று மட்டும் சவரனுக்கு ₹1,680 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹14,790-க்கும், 1 சவரன் ₹1,18,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!