News February 8, 2025
மளிகை கடையில் மதுபான கூடம் நடத்தியவர் கைது

பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் சென்ற போது பொம்மிடியில் மளிகை கடையில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டனர் விசாரணையில் மளிகைக்கடையில் பார் நடத்தியது தெரியவந்தது. இது குறித்து மளிகை கடை நடத்திய பெருமாள் என்பவரை காவலர்கள் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ரூ.8000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 22, 2025
தருமபுரி அருகே தந்தை, மகனுக்கு ‘காப்பு’

கடத்துார் அடுத்த மணியம்பாடி வருவாய் கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், அவரது மகன் சிவலிங்கம், ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 22, 2025
தருமபுரி: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

தருமபுரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
தருமபுரி பெண்களின் பாதுகாப்பு எண்கள்

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.