News November 22, 2025

மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

image

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News February 5, 2026

இரவு படுத்தா தூக்கம் வரலையா?

image

தூக்கம் கெட்டுப்போவதில் மனஉளைச்சல் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும், தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் மனப்பான்மையும் முக்கிய காரணிகளாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தினமும் தூங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது அவசியம் எனவும் இதனால் மனநிம்மதி கிடைத்து நன்றாக தூங்க முடியும் எனவும் கூறுகின்றனர்.

News February 5, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹2,500: ரங்கசாமி தொடங்கி வைத்தார்

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500-ஆக உயர்த்தி CM ரங்கசாமி அறிவித்திருந்தார். உயர்த்தப்பட்ட நிதியுதவி திட்டத்தை இன்று அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹2,500 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். எவ்வளவு உயரும் என்ற அறிவிப்பு தேர்தல் வாக்குறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 5, 2026

ஆளே மாறிப்போன குஷ்பு!

image

பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள குஷ்பு சுந்தர், சமீப காலமாக உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடையை குறைத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஷ்புவா இது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

error: Content is protected !!