News February 2, 2025

மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை

image

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பூக்கடை சத்திரத்திற்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தை மாத முகூர்த்த தினமான இன்று திருமணம், கிரஹபிரவேசம், வளைகாப்பு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதால், மல்லிப்பூ தேவை அதிகரித்துள்ளது. நேற்று 1 கிலோ ரூ.3,000க்கு விற்கப்பட்டது. விலை அதிகரித்தாலும், மல்லிகைப்பூ கிடைத்தால் போதும் என பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

Similar News

News March 3, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

காஞ்சிபுரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

காஞ்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

காஞ்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!