News April 26, 2025
மல்லாங்கிணற்றில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

காரியாபட்டி அருகே சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரிய குமார் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மல்லாங்கிணறு விஏஓ கரைமேலு என்பவரை அணுகியுள்ளார். அவர் பெயர் மாற்றம் செய்ய ரூ.3500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூரியகுமார் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை விஏஓவிடம் வழங்கிய போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News April 26, 2025
சிவகாசி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
News April 26, 2025
விருதுநகரில் 1,802 பேர் நாய் கடியால் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 1,802 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதில் நாரணாபுரம் பகுதியில் மட்டும் 46 பேரை நாய்கள் கடித்துள்ளது. தற்போது அனைவரும் நலமுடன் உள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் ஏப்.5,6 அன்று மட்டுமே 87 பேரை நாய்கள் கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 25, 2025
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி கடந்த மார்ச். 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி மலையேறி சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.