News September 18, 2025
மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 3, 2026
விழுப்புரத்தில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!
News March 3, 2026
விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவிதொகை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 620 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடி தீர்வு காண வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
News March 3, 2026
விழுப்புரம்: புதிய யுக்தியை கையில் எடுத்த தவெக-வினர்!

திண்டிவனத்தில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் மண்டல இணை கண்காணிப்பாளர் அன்பரசன் கலந்து கொண்டு, ”ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, களத்தில் இறங்கி செயல்பட்டு அதனை தீர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிர்வாகியும் முறையாக செய்தால் விஜய்யை முதலமைச்சராக்க முடியும்” என கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்!


