News April 18, 2024
மலை கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு இயந்திரம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் வாக்கு பதிவு மையத்துக்கு அலுவலர்கள் இன்று வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றனர். சுமார் 15 கிலோமீட்டர் மலைப்பாதையில் வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்களை தலைச் சுமையாக தூக்கிக் கொண்டு நடைபயணமாக சென்ற அதிகாரிகள் பின்னர் அங்குள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அமைத்தனர்.
Similar News
News November 28, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News November 28, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

மதுரை மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.


