News May 12, 2024
மலைப்பகுதியில் விபத்து – சுதாரித்த டிரைவர்

தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பகுதியில் இன்று சரியாக 05:20 மணியளவில் எஸ் பெண்ட் எனும் வளைவில் கம்பம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷடவசமாக உயிர்பலி எதுவுமில்லை பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்
Similar News
News April 20, 2025
தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி 21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .
News April 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 20) நீர்மட்டம்: வைகை அணை: 56.23 (71) அடி, வரத்து: 41 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 101 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 9.94 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.20 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.
News April 20, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.