News August 30, 2025
மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டை!

திருச்சி மலைக்கோட்டை என்பது மலைப் பாறையில் கட்டப்பட்ட ஓர் பழங்கால கோட்டை.யாகும். சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோட்டை முதன்முதலாக பல்லவர்களால் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோழர்கள், தில்லி சுல்தான், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என பலரது கட்டுப்பாட்டின் கீழ் இக்கோட்டை இருந்து வந்தது. மேலும் இக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 100 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. SHARE NOW!
Similar News
News August 30, 2025
திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் 149 நாட்களுக்குள், 6 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 27-ம் தேதி அன்று திருச்சி கோட்டத்தில் சரக்கு ரயில் மூலம் 6.024 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டை விட 6.4 சதவீதம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக திருச்சி ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 30, 2025
திருச்சி: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

திருச்சி மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <
News August 30, 2025
திருச்சி: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025-26ஆம் நிதியாண்டில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்.2-ம் தேதியும், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்.3-ம் தேதியும் திருச்சி மாவட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டியில் தனித்தனியாக திருச்சி மாவட்ட மையம் நூலக கூட்டரங்கில் நடைபெறும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.