News April 14, 2025

மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் – போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

Similar News

News April 16, 2025

கல்வி செலவை அரசே ஏற்கும் – புதுவை முதல்வர்

image

புதுவையில் மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை விழாவில் இன்று புதுச்சேரி முதல்வர் பங்கேற்றார். அதில், மீனவ இன மாணவ மாணவிகளுக்கான கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்கும் எனும் புதிய அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.

News April 16, 2025

NLC நிறுவனத்தில் 171 காலிப்பணியிடங்கள்

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். SHARE செய்யவும்

News April 16, 2025

புதுவை பணியாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

image

புதுச்சேரி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வரும் ஏப்.27 ஞாயிறு அன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டினை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்திலிருந்து 16.04.2025 முதல் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதுவை அரசு சார்பு செயலர் அறிவித்துள்ளார்

error: Content is protected !!