News January 25, 2026
மறைமலைநகர்: இது நம்ம ஆட்டம்–2026’ போட்டிகள் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (ஜன.25) முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம்–2026” தொடங்கியது. இந்த நிகழ்வை ஆட்சியர் சினேகா I.A.S மற்றும் எம்.எல்.ஏ வரலக்ஷ்மி மதுசூதனன் தொடங்கி வைத்தனர். 16–35 வயதுக்குட்பட்ட 600 வீரர்கள் 8 வகை போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றியாளர்கள் மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.
Similar News
News January 28, 2026
கிளாம்பாகத்தில் பேருந்து விபத்து

கிளாம்பாகத்தில் இருந்து நேற்று மதியம் 30 பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே திடீரென பிரேக் பழுதானது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனர் சாலையோர தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
செங்கை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
செங்கை: அண்ணனின் விரலை கடித்து துப்பிய தம்பி

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் (ம) தினேஷ் அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் வீட்டு வாசலில் காரை நிறுத்துவது தொடர்பான பார்க்கிங் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பிரச்சனை முற்றிய நிலையில் அண்ணன் தினேஷின் விரலை தம்பி ராஜேஷ் கடித்து துண்டாக்கி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


