News March 16, 2026

மறைந்த இந்திய நட்சத்திரங்களை கெளரவித்த ஆஸ்கர்!

image

2025 & 2026-ம் ஆண்டுகளில் மறைந்த பல நாடுகளை சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுக்கு ஆஸ்கர் நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், இந்தியாவின் தர்மேந்திரா, சரோஜா தேவி, மனோஜ் குமார், கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோர் இடம்பெறவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில்தான் தற்போது, Oscar-ன் Official Website-ல் Memoriam பிரிவில் இந்த நால்வரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

தங்கம் விலை மளமளவென குறைகிறது

image

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், USA வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக உள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் மதிப்பை வலுவடைய செய்யும் என்பதால், தங்கம் விலை சரிந்து சர்வதேச சந்தையில் 4,500 டாலருக்கு கீழ் வரக்கூடும். இதனால் உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 7, 2026

FLASH: ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

image

ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். அவர் சிறையில் இருந்தபடி முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது விதிகளின்படி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல், ஆலங்குளத்தில் ஹரி நாடார் 37,727 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2026

லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

image

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!