News November 22, 2025
மறைந்தார் பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன்

மறைந்த <<18358061>>ஈரோடு தமிழன்பன்<<>> திரைத்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். 1984-ல் ’அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ’கரிசல் தரிசு’ & ’கையில காசு’ ஆகிய 2 பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன், ’நீயும் நானும்’ படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இயக்கத்திலும் ஆர்வம் இருந்ததால், 1983-ல் ’வசந்தத்தில் வானவில்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அப்படம் ரோம் திரைப்பட விழாவில் விருது வென்றது.
Similar News
News February 1, 2026
ஒரே வாரத்தில் 3 அரசு வேலைகள்.. எப்புட்ரா!

திருப்பதியைச் சேர்ந்த சாந்தினி ஒரே வாரத்தில் 3 அரசு வேலைகளுக்கு தேர்வாகி அசத்தியுள்ளார். புதன்கிழமை நீதித்துறையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, அடுத்த 2 நாள்களில் குரூப்-2 மூலம் மற்றொரு வேலை கிடைத்தது. மேலும், வெள்ளியன்று வெளியான குரூப்-1 முடிவுகளில் DSP பதவிக்கு தேர்வாகினார். இதன்மூலம், ஒரே வாரத்தில் 3 அரசுப் பணிகளுக்கு தேர்வாகிய அவர், கடினமாக படித்தால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார்.
News January 31, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

நியூசி., அணிக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 271 ரன்களை குவித்தது. இந்திய வீரர் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசி., வீரர்கள் முதல் 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தனர். எனினும், அடுத்த 10 ஓவர்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தால் அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
News January 31, 2026
மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை செய்துகொள்ளலாமா?

மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை செய்துகொள்வதில் எந்த தவறுமில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்களை சீரமைப்பது போலத்தான், இதை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். இச்சிகிச்சையையினால் மார்பக புற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர். ஆனால், இந்த சிகிச்சையால் புற்றுநோய் ஏற்படாது; பெண்கள் தன்னம்பிக்கை பெற தாராளமாக மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


