News May 29, 2024
மறு கட்டமைப்பை பார்த்து ரசித்த அதிமுக நகரச் செயலாளர்.
நாகை பழைய பேருந்து நிலையம் அருகே டச்சு காரர்களால் கட்டுப்பட்ட 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய பேதுரு ஆலயம் பழமை மாறாமல் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதிமுக நாகை நகரச் செயலாளரும், வழக்கறிஞருமான தங்க கதிரவன் பங்கேற்று மறுகட்டமைப்பை பார்த்து ரசித்தார்.
Similar News
News November 20, 2024
நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட்
நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று (20/11/2024) புதன்கிழமை காலை முதல் நாகையின் பல பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகையில் விடாமல் பெய்யும் கானமழையினால் நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
News November 20, 2024
நாகை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இடமாற்றம்
நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
News November 20, 2024
நாகை மாவட்டத்தில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வரும் நவ.26 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!