News May 17, 2024
மர கன்றுகள் நட மாநகராட்சியை அணுகலாம்

அடுத்த வாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில் மரக்கன்று நடுவதற்கு இடங்களை மாநகராட்சி தேர்வு செய்து வருகிறது. குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் இலவசமாக மர கன்றுகளை நட மாநகராட்சி அலுவலகத்தை நாடலாம். இது போன்று இது வரை 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
Similar News
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 2/2

நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 1/1

சென்னையில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரும் விபத்திலிருந்து தற்காத்து கொள்ள சில வழி முறைகளை பின்பற்றலாம். முதலில் உங்கள் பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணிலோ இந்த <
News August 23, 2025
சென்னை நாள் – புத்தக கண்காட்சி

சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.