News November 15, 2024

மர்மமான முறையில் இறந்த பசு மாடுகள்

image

கொள்ளிடம் அருகே கடலோர பழையாறு கிராமத்தில் மடவாமேடு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் காட்டுப்பகுதி உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் மேய்ச்சலுக்கு செல்கின்றன. இந்நிலையில் மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 5 பசு மாடுகள் இறந்துள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 2, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

News March 1, 2026

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

மயிலாடுதுறை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!