News May 26, 2024

மருமகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

image

முதுகுளத்தூர் அருகே முத்துவிஜயபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய பிரபாகர் மனைவி உமா, மூத்த மகளுடன் வசித்து வந்தார். மாமனார் சேதுவுக்கும், உமாவிற்கும் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. உமா கடந்த மே 20 பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார் என சேது தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் சேது தூங்கிக் கொண்டிருந்த உமா மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்பது தெரியவந்தது. இன்று சேது கைது செய்யப்பட்டார்.

Similar News

News April 21, 2025

குறைதீர் நாள் கூட்டத்தில் 499 பேர் கோரிக்கை மனு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து 499பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல்சிங், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 21, 2025

இராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் அலுவலக எண்கள்

image

இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள் தொலைபேசி எண்கள்
கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
தாசில்தார் இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க

News April 21, 2025

வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், தேர்தல் தாசில்தார்கள் காளீஸ்வரன் ரவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

error: Content is protected !!