News August 5, 2025
மருந்து கடை முன்பு இறந்து கிடந்த வாலிபர்

பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 6, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினை ஊற்ற கரவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் (ம) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
பெரம்பலூர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025-குள்ள <