News March 30, 2025
மருத்துவ விழிப்புணர்வு முகாம்-கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் புற்றுநோய்,பக்கவாதநோய்,தொழுநோய்,காசநோய்,கண்பார்வை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் ஏப்.9 மற்றும் 16ந் தேதிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்தார்.
Similar News
News February 17, 2026
தேனி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
News February 17, 2026
தேனி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News February 17, 2026
தேனி: 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். Instagram மூலம் இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


