News October 5, 2025
மருத்துவ முகாமில் 12,769 நபர்கள் பயன் ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் இதுவரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் 8 நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,500 ஆண்கள், 7,269 பெண்கள் என மொத்தம் 12,769 பயனடைந்துள்ளனர். இதில் 10,111 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனையும் 8,060 நபர்களுக்கு இசிஜி பரிசோதனை, 1,352 நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை,1009 எக்ஸ் ரே செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
சேலம்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க
News November 9, 2025
சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News November 9, 2025
சேலம்: டிகிரி இருந்தால் போதும்.. வங்கியில் வேலை!

சேலம் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


