News April 15, 2025
மருத்துவர் ரூபத்தில் வந்திறங்கிய கடவுள்

ஜோலார்பேட்டை சின்னபொன்னேரியை சேர்ந்தவர் சிவா – லலிதா தம்பதியின் 7 வயது மகள் கனிஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது தவறுதலாக 5 ருபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். மயக்கமடைந்த சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் தீபானந்தன் விடுப்பில் இருந்த போதும் மருத்துவமனைக்கு வந்து எண்டோஸ்கோபி மூலம் சிறுமியை காப்பாற்றியுள்ளார். தன்னலமற்ற அவரை பாராட்டலாமே!.
Similar News
News April 18, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தில் நஷ்டமா . ..? சரி செய்ய இங்கு போங்க

திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயத்தின் சிறப்பு. இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார் அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக்காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார், அவருக்கு இறைவன் காட்சி தந்து கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். இந்த தளத்தில் நியமத்தோடு வேண்டினால் வியாபாரக்கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
News April 18, 2025
இலவச கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. தடகளம், கபடி, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கை பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.